தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரிடம் கருத்து கேட்டதில் அதிகமானோர் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கூடத்திற்கு வரலாம் என்றும். அல்லது பெற்றோர் சம்மதத்துடன் வீட்டிலிருந்தே பாடங்களை படிக்கலாம் என்றும். பெற்றோர்களின் இசைவு கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளி அனுமதிக்க வேண்டும் என்றும். பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்றும் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது