கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை வைத்து அரசு பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய வயது 37 அரசு பள்ளியில் கணித ஆசிரியராக இருக்கும் இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் கடந்த 29ஆம் தேதி மதியம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு ராமகிருஷ்ணாபுரம் காட்டுப்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலைசெய்யப்பட்ட ஆசிரியரின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் கூலிப்படையினர் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வர தொடங்கியது. ஆசிரியர் சிவக்குமார் மூன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியைகளுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஊத்தங்கரை சேர்ந்த லட்சுமி என்பவருடன்அடிக்கடி தொடர்பு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் ஆசிரியையின் கணவர் இளங்கோவுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் ஆசிரியர் சிவக்குமாரை இளங்கோ கண்டித்துள்ளார். ஆனால் எவ்வளவு சொல்லியும் சிவகுமார் கேட்கவில்லை என்பதால் ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலிப்படை தலைவனும் லாரி உரிமையாளருமான வெள்ளைச்சாமியிடம் ஆசிரியர் சிவக்குமார் கை கால்களை உடைக்க ஒரு லட்சம் கொடுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கூலிப்படையினர் கடந்த 29ஆம் தேதி காலை ஊத்தங்கரை அடுத்த ஜோதி நகர் அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை வழிமறித்து 9 பேர் கொண்ட கும்பல் சொகுசு காரில் கடத்தி சென்று கை மற்றும் கால்கள் கழுத்து பகுதிகளில் பங்களாமேடு ராமகிருஷ்ணாபுரம் காட்டுப்பகுதியில் ரயில்வே ரோடு அருகே கீழே தள்ளிவிட்டு அவர் தலை மீது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த கொலை வழக்கு தொடர்பாக லட்சுமியின் கணவர் இளங்கோ உள்ளிட்ட 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது