கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு 117 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்ததோடு அவற்றை முற்றிலும் பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் உத்தரவிட்டது.
அந்தப் பட்டியலில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டானது தடை விதிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பப்ஜி விளையாட்டின் புதிய பரிமாணத்தை வெளியீடு செய்ய இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனாலும் அது எப்போது வெளியாகும் என்ற தகவல் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

இது பற்றி பப்ஜி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தனியார் நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு,` மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பப்ஜி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை’ என பதில் அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பப்ஜி விளையாட்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவில் இந்த கேம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனினும், தற்போதைய மத்திய அமைச்சகத்தின் பதில் மற்றும் முந்தைய பதில்களில் பப்ஜி வெளியீட்டை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.