தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த நவம்பர் மாதம் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதில் தமிழக அரசு நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது என தெரிவித்தார். மேலும் சுமார் நான்கு லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்களுக்காக தனி அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை அமைக்கும் என பேசியிருந்தார். இந்த நிலையில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான அமைப்புசார தொழிலாளர் நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்பு தொழில் அமைப்புகளை சார்ந்த தொழிலாளர்கள் நலன்கருதி அம்மா அரசால் ‘பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கென தனியே ஒரு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம்’ அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.