சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி ,சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், அப்பாஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்து இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பதைவிட வாழ்ந்திருந்தார் என்பதுதான் உண்மை. இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மீனா மற்றும் நக்மா தான் என்று கூறப்படுகிறது.
அதன்பின்னர்தான் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஒப்பந்தமாகி நடித்துள்ளார்.ஒருவேளை மீனா அல்லது நக்மா நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்று தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்