நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டம் தீட்டிக் கொண்டு வருகிறது.
நோக்கியா என்ற ஒரு சாம்ராஜ்யம் ஐந்து வருடங்களுக்கு முன்னால் உலகையே ஆட்சி செய்துவந்தது. இரண்டு கைகள் இணையும் லோகோவை பார்த்ததும் இன்று கூட மக்கள் நோக்கியா என சரியாகச் சொல்வார்கள்.

கண்ணும், கண்ணும் நோக்கியா என அந்நியன் திரைப்படத்தில் ஒரு பாடலும் இடம்பெற்று இருந்தது. பேசிக் மாடல் மொபைல்களுடன் நோக்கியா கம்பெனி மூடப்பட்டது என ஆங்காங்கே புரளிகள் எழுந்தாலும் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கால் பதித்து தற்போது அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளது நோக்கியா. நாம் இந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நோக்கியா தனது அடுத்த அப்டேட் ஆண்ட்ராய்டு மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.இந்த புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 5.4 ஆக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது