ஆங்கிலேயர்களை நம் நாட்டைவிட்டு விரட்ட இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ். அவரது பிறந்த தினத்தை வலோமை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி கூறுகையில், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி இனி ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு நேதாஜியின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
முதலாவது வலிமை தின நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைறெ உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ள உள்ளார். நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் தொடங்கி வைக்கிறார். இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. முதலாவது வலிமை தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்நிலை குழு அமைப்பட்டுள்ளது” என்றார்