ஒவ்வொரு படிப்பில் சேருவதற்கும் ஒவ்வொரு நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தான் நீட். பொதுவாக மருத்துவ படிப்புகளுக்காக நம் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்த அளவிற்கு போராடிக் கொண்டு இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த நீட் விவகாரத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏற்க தக்கதல்ல என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. அதன்படி அரசு ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச்செய்யும் என்றும் மத்திய அரசு அதை எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றது