போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட தமிழக அரசு துரித பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் இந்த மாதம் 27-ம்ப்தேதி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள ஜெயலலிதான் நினைவிடம்ப்கிறப்புவிழா காண்கிறது. அதைத்தொடர்ந்து 28-ம் தேதி வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறாதுவிடப்படுகிறது. இருகுறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், “வரும் ஜனவரி 28-ம் தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா நினைவில்லம் மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது.
வேதா இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகவும் விரும்பி படித்த புத்தகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளது” எனக் கூறினார்