தென் இந்தியாவில் தக்காளி சாதம், சாம்பார் சாதம் எவ்வளவு பேமஸோ அதேபோல் வட மாநிலங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு உணவைபற்றி தான் நாம் பார்க்க போகிறோம் . அதுதான் காய்கறி சாதம்
காய்கறி சாதம் செய்ய தேவையான பொருட்கள்
கேரட் – இரண்டு
உருளைக்கிழங்கு – இரண்டு
காலிபிளவர் – பாதி பூ
பட்டாணி – ஒரு கப்
பீன்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
தயிர் – 1/2 கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கருவாப்பட்டை குச்சி – ஒர
கருப்பு ஏலக்காய் – ஒரு
மிளகு – ஐந்து
இலவங்கப்பட்ட இலை – இரண்டு
பச்சை மிளகாய் – மூன்று
உப்பு – தேவையான அளவு
மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி கரம்
மிளகாய் பொடி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி – இரண்டு தேக்கரண்டி
நெய் – 1/2 கப்
காய்கறி சாதம் எளிய செய்முறை
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, மற்றும் கேரட்டை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் பட்டை, பிரியாணி இலை, கருப்பு மிளகு, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வதக்குங்கள். அடுத்தது சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். அடுத்து தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்து தயிர் சேர்த்த பிறகு எல்லா காய்கறிகளையும் போடுங்கள். காய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் என்று எல்லா மசாலாக்களையும் போட்டு கிளறிக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து அவற்றை மொத்தமாக காய்கறிகளுடன் சேர்த்து கிளறுங்கள். பார்த்து பக்குவமாக கிளறுங்கள். ஏனென்றால் அரிசி உடைய வாய்ப்புள்ளது. இப்பொழுது தேவையெனில் தேவைக்கேற்ப அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் சமைத்து இறக்கவும். பிறகு பாத்திரத்தில் இருந்து சுடச்சுட காய்கறி சாதத்தை எடுத்து தயிர் வெங்காயம் அல்லது ரைதா வைத்து பரிமாறுங்கள். நாவூற வைக்கும் சுவை கிடைத்துவிடும்.