இந்தியா போலியோ நோய் இல்லாத நாடாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் மற்ற நாடுகளில் இருந்து போலியோ பரவாமல் தடுக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஜனவரி 31) நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
சொட்டுமருந்து வழங்கும் பணியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 41 ஆயிரத்து 53 மையங்களில் சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.