புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளி சேர்ந்தவர். பச்சையப்பன் பால் வியாபாரியான இவரது மகன் தர்ஷன். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த தர்ஷன்.மாலை வீட்டின் அறையில் அமர்ந்துகொண்டு காதில் ஹெட்போனை மாட்டி அதிக சத்தம் வைத்துக்கொண்டு நான்குமணி நேரமாக தொடர்ச்சியாக பயர்வால் என்கிற ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார் ஆன்லைன் கேம் ஆடிக் கொண்டிருந்த போதே திடீரென்று மயங்கி விழுந்துள்ளார் மாணவர் தர்ஷன்.
உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் அந்த மருத்துவமனையின் அறிவுறுத்தலின் பேரில் உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு மாணவன் தர்ஷன் உயிரிழந்ததாக பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தனது மகன் உயிரிழந்ததை அடுத்து சோகத்துடன் சேர்ந்த அதிர்ச்சியும் அவர்களுக்கு காத்திருந்தது. இதன்பேரில் தர்ஷனின் தந்தை பச்சையப்பன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் அபாயம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வளர்ப்பதுடன். மொபைல் போன்களுடன் குழந்தைகள் தனிமையாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்று இந்த சம்பவம் நமக்கு அறிவுறுத்துகின்றது.