டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. எனவே மிகக் குறைந்த விலையில் அங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. வருடக்கணக்கில் குறைந்த விலையில் உணவு விற்கும் இந்த கேண்டினுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, விமர்சனம் செய்து வந்தனர். இதயடுத்து நாடாளுமன்ற வளாக கேண்டீனில் மானியம் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே வடக்கு ரயில்வேக்கு இந்த கேண்டினை நடத்திவந்த நிலையில், இப்போது இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கேன்டீனை பொறுப்பேற்று நடத்தி வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில் கேன்டீனில் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சப்பாத்தி 3 ரூபாய்க்கும், சைவ உணவு பபெட் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு 65 ரூபாய்க்கு விற்பனையான ஐதராபாத் மட்டன் பிரியாணி150 ரூபாயாகவும், 12 ரூபாய்க்கு விற்பனையான வேகவைக்கப்பட்ட காய்கறிகள் ரூ.50 எனவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அசைவ உணவு பபெட் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. மானியம் ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசுக்கு வருடத்துக்கு 8 கோடி ராய் வரை மிச்சப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.