நாகப்பட்டிணம் ஏடிஎஸ்பியாக இருப்பவர் முருகேசன். இவர் தினம் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டு வீடு திரும்பும் பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏடிஎஸ்பி முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது நாகப்பட்டிணம் மாவட்ட காவல்துறையினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.