பிரம்மாண்டமான கதை களத்தை கொண்டு புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் “டைனோசரஸ்”. இந்த படத்திற்கு எதற்காக “டைனோசரஸ்” என்று பெயரிடப்பட்டு உள்ளது என்பது இந்த படத்தை பார்க்கும் போது தான் தெரியும் என்று கூறுகிறார்கள் படக்குழுவினர் .
மேலும் இந்த படத்தில் நடிகர் உதய் கார்த்திக் ,ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா ,யாமினி சுந்தர், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்துடைய மோஷன் போஸ்டரை இந்தியாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் போனிகபூர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
மயில் என தமிழ்த்திரையுலகம் தூக்கிவைத்து கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தான் போனிகபூர். தமிழ் சினிமாவில் முக்கியமான 130 பேர் சேர்ந்து நடித்துள்ள படம்தான் இந்த “டைனோசரஸ்” இந்த படத்தின் போஸ்டரை அஜித்தின் “வலிமை” பட தயாரிப்பாளர் போனி கபூர் நட்புக்காக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட பதிவின் கீழ் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தினுடைய அப்டேட் எப்போது வெளியிடுவார்கள்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். கூடவே வலிமைக்காக வெயிட்டிங்…நீங்களோ டைனோசர் போஸ்டரை வெளியிட்டிருக்கிறீர்கள் என தொடர்ந்து வலிமை அப்டேட்ஸ் கேட்டு போனிகபூரை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இதைப் பார்த்து போனிகபூரே அடடே தல அஜித்துக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா? என சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளார். பின்னே, இந்த எதிர்பார்ப்பெல்லாம் அவரது கல்லாபெட்டியைத் தானே நிறைக்கப் போகிறது.