தமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் படையை கொண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர்.சி பிரபலமான திரைப்பட இயக்குனர்.
தமிழ் நடிகைகளில் குஷ்பு ரசிகர் களின் இதயசிம்மாசனத்தில் அமர்ந்தவர். அதனால் அவருக்கு கோயிலே கட்டினார்கள் அவரது ரசிகர்கள். 1980களில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் துவங்கிய குஷ்பு, 1990களில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். இவருக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர்.
நடிகை குஷ்பு முதலில் திமுக கட்சியில் இருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமீபத்தில் அங்கிருந்தும் வெளியேறி பாஜகவில் இணைந்தார். இணைந்த சில மாதங்களிலேயே ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளரும் ஆகிவிட்டார் குஷ்பு. இப்போதும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார் குஷ்பு. சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருப்பவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்ததன் அடிப்படையில் அவரது சொத்து விபரங்களைப் பார்ப்போம் வாருங்கள்..
அசையும் சொத்து: 6 கோடியே 39 லட்சத்து 43,751
அசையா சொத்து: 34 கோடியே 56 லட்சத்து 87,500 ரூபாய்
மொத்தம்” 40 கோடியே 96 லட்சத்து 21,251
ஆண்டு வருமானம்: 1,50, 82,550