தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ரக்ஷிதா. இவர் தனது பெயரை ஆனந்தி என மாற்றிக்கொண்டு, தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனால் அவரை கயல் ஆனந்தி என்றே அனைவரும் அழைக்கிறார்கள். ‘சண்டி வீரன்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘ரூபாய்’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல சினிமாக்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் கயல் ஆனந்தி.
இவர் சில சினிமாக்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று அலாவுதீனின் அற்புத கேமரா. இந்த சினிமாவில் இணை இயக்குநராக பணியாற்றிய சாக்ரடீஸ் என்பவருக்கும் கயல் ஆனந்திக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தீவிரமாக காதலித்த இவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்தோடு நேற்று திடீரென திருமணம் செய்துகொண்டனர்.
தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நேற்று இரவு 8 மணிக்கு இவர்கள் திருமணம் நடந்துள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடித்ததால் நெருங்கிய சிலருக்கு மட்டுமே அழைப்பு கொடுத்ததாகவும். வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி திரையுலகினரை அழைத்து பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருவீட்டாரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.