தமிழ்த்திரையுலகில் வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ராஜ்கிரண். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இவர், பல படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்துள்ளார்.
சிக்கன், மட்டனை செமத்தியாக யாரும் சாப்பிட்டால் கூட நடிகர் ராஜ்கிரணையே மிஞ்சிடுவ போல இருக்கே எனச் சொல்லும் அளவுக்கு ராஜ்கிரண் பேமஸ். 1989 இல் என்ன பெத்த ராசா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான ராஜ்கிரண்,1991 இல் என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களை இயக்கி தயாரிக்கவும் செய்த ராஜ்கிரண் தான் தமிழில் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நடிகர் என்பது பலருக்கும் தெரியாத அதிசயம்!
நடிகர் ராஜ்கிரணுக்கு இப்போது 70 வயதாகிறது. அவரது செல்ல மகன் திப்பு சுல்தான் நைனார் முகமதுவுக்கு இப்போது 20 வயது ஆகிறது. தாமதமாக குழந்தை பிறந்த ராஜ்கிரணுக்கு தன் மகன் என்றால் ரொம்பவும் ப்ரியம். ராஜ்கிரணின் மகன், திப்பு சுல்தான் நைனார் முகமதுவும் சினிமாத்துறைக்கு விரைவில் வருகிறார். 1991 இல் ராஜ்கிரண் தயாரித்து பெரும் வெற்றிபெற்ற ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறாராம்.
என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை ராஜ்கிரண் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவே இயக்கவும் செய்து உள்ளார். இந்த தகவலை ராஜ்கிரணே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.