நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம்தான் ஈஸ்வரன் இந்த படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருகின்றார்.
மேலும் அடுத்ததாக சிம்பு பத்து தல என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். கன்னட படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்ற உள்ளார். இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து நடிகர் சிம்புவுடன் சேர்ந்து படம் செய்ய காத்திருக்கும் இயக்குனர்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. மிஸ்கின், ராம், சுசீந்திரன்
, கௌதம் வாசுதேவ் மேனன், V.Z.துரை என பட்டியல் நீண்டுகொண்டே போக சிம்பு ரசிகர்கள் இப்போது ரொம்ப ஹேப்பி!