பிக்பாஸ் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ். கமலஹாசன் அண்மையில் தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற வழியெங்கும் பிக்பாஸ் குறித்தே மக்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அந்த அளவுக்கு பிக்பாஸ் மக்கள் மத்தியில் ஹிட் ஏற்கனவே மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அண்மையில் பிக்பாஸ் சீசன் 4 நடந்து முடிந்தது. இதில் ஆரி டைட்டில் வின் செய்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் கடைசி எபிசோடில் கமல், கதர் ஆடைகளுக்கான பிராண்டை தொடங்கியது குறித்தும், தனக்கு வழங்கப்பட்ட ஆடை குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் மோசமாய் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார் நடிகை சுச்சி. அதாவது, கமல்ஹாசன் கொடுத்த துணி கதர் இல்லை என்றும் அதுவொரு சிந்தடிக் துணி என்றும் கமல்ஹாசனின் முட்டாள்தனமான பிராண்ட் மற்றும் கேவலமான ரசனையுடன் கூடிய டிசைன் தனக்கு அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகநாயகனை இவ்வளவு மோசமாக விமர்சித்த சுச்சியின் செயலுக்கு இணையத்தில் கண்டணங்கள் குவிந்துவருகிறது.