ங்களூரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியாக கருத்தப்படும் ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விமான கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. நாளையும், நாளை மறுநாளும் விமான கண்காட்சியை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். விமான கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று பெங்களூர் தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா அங்கு சென்றிருந்தார்.
மேலும் அவர் தேஜஸ் விமானத்தில் பயணம் செய்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அங்கிருந்த பார்வையாளர்கள் இதைக் கண்டு கைதட்டி உற்சாகப்படுத்தினர். விமான பயணத்திற்கு பின் எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறுகையில், “ஆச்சரியம் நிறைந்த தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். தேஜஸ்வி சூர்யா இதற்கு முன்பு விமானத்தில் பயணம் செய்ய பயிற்சி பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.