தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார் கீர்த்தி சுரேஷ். ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்தில் பிரபல Forbes நிறுவனம் பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் மிகப் பிரபலமான 30 வயதுக்குள் இருக்கும் பிரபலமடையும் லிஸ்ட் வெளியிட்டது.
இதில் தென்னிந்திய கதாநாயகிகளில் கீர்த்திசுரேஷ் மட்டுமே இடம் பிடித்துள்ளார். இந்த வரிசைப் பட்டியல் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை நடிகை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்