திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பொதுக்கணக்குக்குழு தலைவராக இருக்கும் துரைமுருகன், பொதுக்கணக்குக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுசெய்தார். தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டப் பணிகளையும் ஆய்வுசெய்தார். மாலையில் அவர் திருச்சி வழியாக மீண்டும் சென்னைக்கு சென்றார்.
அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகனுக்கு லேசான காய்ச்சலும், கூடவே மூச்சுத்திணறலும் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக திமுக வட்டாரத்தில் தெரிவித்தனர்.