கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு 234 தொகுதிகளில் திமுக பெற்றிப் பெறும் என அறிவித்தார். அடுத்த சில நாட்களில் 200 இடங்களில் வெற்றிப்பெறும் என்றார். இனி படிப்படியாக குறைந்து அடுத்த வாரத்தில் 100 தொகுதி என்பார். ஆனால், தேர்தலின் முடிவில் திமுக வெறும் 34 தொகுதிகளில் தான் வெற்றிப்பெறும். இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான். அப்படி இருக்கும்போது ஊழல் குறித்து திமுக-வினர் பேசலாமா. குடும்பக் கட்சியான திமுக நாட்டை ஆள வேண்டுமா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார்