கடந்த இரு வருடங்களாக திரையரங்குகளுக்கு செல்லாமல் காய்ந்துபோய் கிடந்த மக்களுக்கு இனிப்பான செய்தியாக சில கட்டுப்பாடுகளுடன் திரையரங்கம் திறக்கப்பட்டு தற்போது மாஸ்டர்,ஈஸ்வரன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் திரையரங்கத்திற்கு இருக்கும் அந்த கட்டுப்பாடுகளை எப்பொழுது முற்றிலுமாக தளர்த்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

50% மட்டுமே பார்வையாளர்களை அனுமதித்த அரசாங்கம் தற்போது 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் அனைத்தையும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த விதிமுறைகள் குறித்து அவர் கூறுகையில், ”தற்போது திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் முழு அளவில் செயல்படலாம் மேலும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்துதல் மற்றும் கோவிட் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என கூறினார்.