ஒரு மா
தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரானமாக கடந்த ஜனவரி 5-ம் தேதி சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜிக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் சுயமாக சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட அவர் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும் சில நாட்கள் வீட்டு ஓய்விலேயே இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.