புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருநள்ளாரில் அமைந்துள்ள தர்பணாயேஸ்வரர் கோவில் சனிபரிகார ஸ்தலமாகும். இங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் நாடுமுழுவதும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருவது வழக்கம்.
கரோனா காரணமாக தற்போது கோவிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும் நள தீர்த்தத்தில் நீராட அனுமதிப்பதில்லை என்றும் புதுச்சேரி அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன். 48 நாட்கள் பூஜைக்கும் அனுமதி வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கரோனா விதிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முககவசம் அணிந்து பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் 48 நாட்கள் விழாவை நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியது