திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த மாமியாரால் அவமானம் ஏற்பட்டதாக உணர்ந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமலாம்பாள். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது வீட்டில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார் .இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாம்பாள் மகனுக்கும் சகுந்தலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவது மருமகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யக்கூடாது என்று தனது மாமியாருக்கு சகுந்தலா தொடர்ந்து சொல்லிவந்துள்ளார்
. அதில் மனம் திருந்திய கமலாம்பாள் அந்த தொழிலை விட்டு விட்டு திருந்தி வாழ்ந்துள்ளார் ஆனால் திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் இந்த சூழலில் மருமகளுக்கு தெரியாமல் மீண்டும் மது பாட்டில்களை வாங்கி வந்து கமலாம்பாள் அருகே உள்ள கொட்டகையில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கமலாம்பாள் மீது பாட்டில்களை மறைத்து வைத்திருந்த கொட்டகையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து கமலாம்பாள் செய்த விஷயத்தை தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு கமலம்பாளை அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை அவமானமாக கருதிய மருமகள் சகுந்தலா திடீர் என்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.