தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தமது தொண்டர்களை உற்சாகத்துடன் வைத்திருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவில் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகிறார். கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என திமுக முகாமில் பலரும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க்விட்டனர். அதிமுகவிலும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என மூத்த தலைவர்கல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கூடவே, வெற்றிநடை போடும் தமிழகமே என அதிமுக சார்பில் தொடர்ந்து விளம்பரங்கள் செய்து கவனம் குவித்துவருகின்றனர்.
முன்பெல்லாம் பிரமாண்டமான மேடை போட்டு பேசிப் பேசியே திராவிட கட்சிகள் வளர்ந்தன. ஆனால் இப்போது ட்ரெண்ட் மாறி இருக்கிறது. வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் என இளைஞர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. அதனால் பிரச்சாரத்தை அதனை நோக்கித் திருப்பியிருக்கிறது அதிமுக. இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிரடி டெக்னிக் ஒன்றையும் வகுத்துள்ளது. அதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இளம் வாக்காளார்களைக் கவரும்வகையில் அதிமுகவின் ஐடி விங் தரப்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் 150 அம்மா வாட்ஸ் குரூப் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளாக பிப்.24-க்கு முன்னதாக இந்த வாட்ஸ் அப் குரூப்புகள் உருவாக்கப்பட ஏற்பாடுகள் தீவிரமாக நடது வருகிறது. அம்மாவின் நல்லாட்சி தொடர என்ற முழக்கத்துடன் அதிமுக அரசின் சாதனைகளை இந்த வாட்ஸ் குரூப் மூலம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனராம். 8300234234 என்ற எண் மூலம் இந்த வாட்ஸ் குரூப்பில் இணையலாமாம். இது நம்ம லிஸ்ட் ல யே இல்லையே அடேங்கப்பா என சொல்லும் அளவுக்கு புதிது, புதிதாக ரூட் பிடித்து யோசிக்கிறது அதிமுக!