இந்தியாவில் ஸ்மார்ட்போனின் தரம் மற்றும் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் அதன் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருந்தனர். அந்த சமயத்தில் கல்வி, வேலை, பொழுதுபோக்கு எனப் பல காரணங்களுக்காகவும் இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரமானது விகிதத்தில் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லாக்டவுன் காலத்தில் ஸ்மார்ட்போன் மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. தற்போதுள்ள நிலவரப்படி 25% உயர்வு பெற்றுள்ளது மொபைல்போன் பயன்பாடு. இது கிட்டத்தட்ட 7 மணிநேரமாம்
எனவே இந்த லாக்டவுன் காலத்தில் கல்வி, வேலை, பொழுதுபோக்கு மற்றும் இதர அனைத்து தேவைகளுக்காக மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படும் நேரம் 25 சதவீதம் அதிகரித்து 7 மணிநேரமாக உயர்ந்துள்ளது என முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

2019ன் சர்வே படி இந்திய மக்கள் சராசரியாக ஒரு நாளில் ஸ்மார்ட்போனில் செலவு செய்யும் நேரம் 4.9 மணிநேரமாக இருந்தது இந்த நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் 2020ம் ஆண்டில் 11 சதவீத உயர்வுடன் இந்தக் கால அளவு 5.5 மணிநேரமாக உயர்ந்தது.
வேலை மற்றும் பொழுதுபோக்கு பணிகளுக்காக இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கால் செய்யும் அளவீடு 63 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக இளசுகள் மற்றும் பொடுசுகளின் சமுக வலைதளம், கேமிங்
பயன்பாட்டு நேரம் லாக்டவுன் காலத்தில் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இதேபோல் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடும் நேரத்தின் அளவு இந்த லாக்டவுன் காலத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதிலும் மக்கள் செலவு செய்யும் நேரம் 14 நிமிடத்தில் இருந்து 18 நிமிடமாக அதிகரித்துள்ளது இதன் மூலம் இந்திய மக்களின் வாழ்வை ஸ்மார்ட் போன் எந்த அளவுக்கு ஆக்ரமித்துள்ளது என தெரிகிறது. மொத்தத்தில் இந்தியர்கள் குடும்பத்தைவிட ஸ்மார்ட் போன்களோடு கூடுதல் நேரம் செலவு செய்வது தெரிகிறது.