ஆப்பிள் நிறுவனமானது தனது ஆப் ஸ்டோரில் இருந்து சில செயலிகளை திடீரென நீக்கி இருப்பது ஆப்பிள் வாசிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதன் விவரம் தான் என்ன?
ஆப்பிள் நிறுவன வரலாற்றிலேயே ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆப் ஸ்டோரில் இருந்து மொத்தம் 46 ஆயிரம் செயலிகள் நீக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 39 ஆயிரம் செயலிகள் கேம்கள் ஆகும்.
ஆப்பிள் நிறுவனமானது தனது சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39 ஆயிரம் கேம் செயலிகளை தற்போது நீக்கி இருக்கிறது. அந்த செயலிகள் செயல்பட தகுந்த உரிமம் பெறாத காரணத்தால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்து இருந்தது. இதனால் தான் உரிமம் பெறாத இச்செயலிகள் ஒரே நாளில் நீக்கப்பட்டு இருக்கிறது.
நீக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் என்பிஏ2கே20 மற்றும் அசாசின்ஸ் கிரீட் ஐடென்டி என பல்வேறு பிரபல கேம்களும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.