நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிக விருப்பம் கொண்டவா். சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப்பில் அவர் உறுப்பினராகவும் உள்ளாா். சென்னை ரைபிள் கிளப் இருக்கும் பகுதியில்தான் முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகம் இருந்தது. இப்போது சென்னை வேப்பேரியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் எழும்பூர் ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்காக கூகுள் மேப் உதவியுடன் வாடகை காரில் சென்றுள்ளார் அஜித். கூகுள் மேப் தவறுதலாகக் புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு வழிகாட்டியுள்ளது. இதனால் அஜித் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரின் புதிய அலுவலகத்துக்கு சென்றுவிட்டார். நடிகர் அஜித் வந்தது தெரிந்ததும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூட்டம் கூடியது.
அதன் பிறகு காவலர்கள் வந்ததும் அஜித் நிலைமையை விளக்கிக்கூறினார். பின்னர் சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு எழும்பூர் சென்றார் நடிகர் அஜித்.