தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கவுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது. விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்தது.இந்த நிலையில் தளபதி 65 வது படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. இதனால் படத்தில் நிறைய சண்டை காட்சிகள் மற்றும் மாஸ் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது என்றும் தளபதி விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.