தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் எடுக்கும் அனைத்து படமும் வித்தியாசமானதாக இருக்கும். அவர் படங்களை பார்த்தால் பிடிக்காது பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் என்று இவருக்கென்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு. தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் நானே வருவேன் என்கிற படத்தில் பிஸியாக பணியாற்றி வருகின்றார் இயக்குனர் செல்வராகவன்.
அந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி சேர்ந்து படத்தை உருவாகி வருகின்றனர். இந்தப் படம் முடிந்த பின்பு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் இவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில், தற்போது Faceapp முலம் தளபதி விஜய் ஆக மாறி மாஸ்டர் பின்னணி இசையில் சர்க்கார் விஜய் கெட்டப்பில் மாசாக காட்சி அளிக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இதைப் பார்த்துவிட்டு தளபதியை இயக்கப் போகிறாரா செல்வா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக.