போக்கிரி பொங்கலைப் போன்று பலத்த எதிர்பார்ப்புடன் மாஸ்டர் பொங்கல் தற்போது ஆரம்பித்துள்ளது. இளம் இயக்குனர் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் அவர் கேட்டது போன்ற டீம் அமைத்து படத்தையும் நடித்துக் கொடுத்துள்ளார். தனிமனிதனாக தமிழ் சினிமாவை மீண்டும் உயிர்ப்பிக்க தளபதி விஜய் சுமார் 11 மாதங்களுக்கு முன்பே முடிந்த நிலையில் தியேட்டரில் தான் வெளியீடு என மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்தது.
இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் சினிமாவில் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார், தளபதி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் பதில் அளித்து வருகின்றார்.ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த நடிகை மாளவிகா மோகனன் .
அப்போது தளபதி தன்னை ’மாலு’ என அழைப்பார் என்றும் மேலும் பிடித்த பாடல்கள் என்ற கேள்விக்கு குட்டி ஸ்டோரி மற்றும் அந்த கண்ண பார்த்தா என்றும் பதில் அளித்துள்ளார்.
இது மட்டுமின்றி பல ரசிகர்களுக்கும் கேட்டுக் கொண்டதன் மூலம் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றனர்.