அஜித்தின் மனைவியான ஷாலினியின் தங்கை ஷாமிலி.இவர் தமிழ் சினிமாவில் அஞ்சலி என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அடையாளத்தை பதித்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் இரண்டு வயதில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் 2009ம் ஆண்டு ஓய் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கடைசியாக ஷாமிலி நடித்த படம்தான் வீரசிவாஜி. இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது அதன்பிறகு தமிழில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் நடிகை ஷாமிலி ஒரு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்ட வண்டியில் அமர்ந்திருக்கும் போட்டோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இது தல ரசிகர்கள் மத்தியில் பெரும் பரவலாக பேசப்பட்டது அதுபோக ஒரு சில தல ரசிகர்களை கடுப்பும் ஏற்றியது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் தலயின் மச்சினிச்சி என்பதை மறந்து விட்டீர்களா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை கண்ட இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் சமூகவலைத்தளங்களில் எழுந்து வருகிறது