டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்ததற்கு நன்றி தெரிவித்து பல தமிழ் அமைப்புகளும் ஆம் ஆத்மி அரசை குளிர்வித்துவருகிறது. இந்நிலையில் தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் “டெல்லியில் தமிழ் அகாடமி” அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் “பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்!” என தமிழில் பதிந்துள்ளார்.