தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடவேண்டும் என பா.ஜ.க தீவிர முயற்சி எடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சத் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு அர்ஜூன் ராம் மேன்வால், அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்