சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் சமயத்தில் புதிய திட்டங்களை அறிவித்து வாக்குகளை அள்ளும் யுக்தியை ஆளும் கட்சியான அ.தி.மு.க கையாண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பொங்கல் பண்டிகைக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது.
தைப்பூச விழாவிற்கு அரசு பொது விடுமுறை அறிவித்தது போன்றவைகளை கொண்டு வந்தது. இந்த நிலையில் பா.ம.க தலைவர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த சமயத்தில் நாளை மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடை பெறுகிறது. இதில் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.