தமிழகத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை வருகிற 12-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதனால் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
குறிப்பாக திருச்சி,தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும், தென் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இந் நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாளை முதல் தஞ்சாவூர்,நாகை, திருவாரூர் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யும். எட்டாம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் இன்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.