தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ” தமிழகத்தில் தினமும் ஆயிரத்திற்கு மேல் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால் அது இப்போது 800 என்ற அளவில் குறைந்துள்ளது.
கொரோனா நோய்க்கான தடுப்பூசி தமிழகத்திற்கு வந்துவிட்டது. அவை தமிழகத்தின் 10 மண்டலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும். வரும் 16ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நோய் தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைக்க உள்ளார்” என்றார்.