தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று 52213 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 589 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதியானது. இன்று 770 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 15229307 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 830772 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். 813568 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சைக்குப் பின் மீண்டனர். தமிழகத்தில் 12264 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, அதே சமயம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது