ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் எண்ணத்தில் செயல்பட்டு வந்தார். டாக்டர்கள் அறிவுறுத்தல்படி, கட்சி தொடங்கவில்லை என்ற அவரது முடிவை வரவேற்கிறேன். ரசிகர்கள் மீதுள்ள அக்கறையினால், மனிதாபிமானத்தோடு, ரஜினி நல்ல முடிவு எடுத்துள்ளார். ரஜினி, கட்சி தொடங்கினாலும், தொடங்காமல் இருந்தாலும் தி.மு.க கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அனேகமாக ரஜினி யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என நினைக்கிறேன். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

கட்சியின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவோடு நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாகச் சொல்லியிருக்கிறோம். எனவே வரும் சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க தனி சின்னத்தில் போட்டியிடும்” என்றார்