வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகள் தடுப்பூசி குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பிரதமர் மோடி, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் நம் நாட்டில் நடந்து வருகிறது. நமது தேசம் சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் வகையிலான திறனை பெற்றுள்ளது.

அதுவும் இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது இந்தியா. தடுப்பூசி இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா முற்றிலும் தன்னம்பிக்கை கொண்டதாக உள்ளது” என்றார் அவர்.