தங்கம் உலகத்தில் உள்ள ஒரு விலைமதிப்பற்ற பொருள்களில் ஒன்று. தங்கத்துக்கு நிகரான முதலீடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தங்கமே முதன்மையான ஒரு மதிக்கத்தக்க பொருளாக இந்த சமூகத்தில் இருந்து வருகிறது.இருப்பினும் ஏழைகளின் எட்டாக்கனியாகவும் இருக்கிறது.

தற்பொழுது தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை பெற்று வருகிறது. ஆனால் அதன் அதிகபட்ச விலையில் இருந்து தங்கம் விலையில் சரிவை காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கணிப்பு என்பது சில சமயங்களில் நடக்கலாம் சில சமயங்களில் நடக்காமலும் இருக்கலாம் எனவும் கூறுவார்கள். அந்தவகையில் தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து 50 – 61.8% வரை வீழ்ச்சி காணலாம் என நிபுணர் குழு கூறியுள்ளது