இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளாரான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் மறுபடியும் டீசல் செக்மண்ட் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
பிஎஸ்-6 வாகனங்களுக்கான எமிஷன் விதிகள் கடுமையாக்கப்பட்டதால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாருதி நிறுவனம டீசல் செக்மண்ட் கார்கள் உற்பத்தியை நிறுத்தியது.
தற்போது மாருதி நிறுவனம் மானேஸ்வரில் உள்ள தனது தொழிற்சாலையை மேம்படுத்தி வருவதாகவும், அடுத்த ஆண்டு மத்தியில் விழா காலம் தொடங்கும் பொழுது இந்த தொழிற்சாலையிலிருந்து பிஎஸ்-6 ரக டீசல் எஞ்சின்கள் வெளிவரக் கூடும் என கூறப்படுகிறது. மாருதியின் எர்டிகா மற்றும் பிரீசா (Ertiga, Vitara Brezza) மாடல் கார்களில் இந்த டீசல் எஞ்சின் தேர்வுடன் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாருதி நிறுவனம் டீசல் கார்கள் தயாரிப்பை நிறுத்தினாலும், நாட்டின் இரண்டாவது பெரிய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் தொடர்ந்து டீசல் ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
பிஎஸ்-6 எமிஷன் விதிகளால், குறைந்த திறன் எஞ்சின் உள்ள சிறிய கார்களில் டீசல் செக்மண்டின் விலை அதிகம் வரும். இதனால் புதிதாக சிறிய வகை கார்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விலை காரணமாக வாங்குவதை தவிர்ப்பார்கள். இதனால் பல கார் உற்பத்தி நிறுவனங்கள் சிறிய ரக கார்களில் டீசல் செக்மண்ட் தயாரிப்பை கை விடுகின்றன