டில்லியில் கடந்த 65 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டத்துக்கி எதிராக போராட்டம் நடத்தினர். நேற்று அவர்கள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. போராட்டகாரர்கள் அத்துமீறியதால் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படன, தடியடி நடந்தது. இந்த நிலையில் வன்முறைக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக விவசாயிகள் போராட்டத்துக்கு தொடக்கம் முதலே ஆதரவளிக்கும் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். வன்முறை குறித்து யோகேந்திர யாதவ் கூறுகையில், “போராட்டத்தின் அங்கமாக இருப்பதால் போராட்டம் நடந்த விதம் குறித்து நான் வெட்கப்படுகிறேன். இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். வன்முறையின் தாக்கம் எந்தவொரு போராட்டத்தையும் தவறான கண்ணோட்டத்துக்கு மாற்றிவிடும். யார் செய்தார்கள், யார் செய்யவில்லை என்பதை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், முக்கியக் குற்றவாளிகள் விவசாயிகள் போராட்டத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டவர்களாக இருக்கும் என தெரிகிறது.
நாம் எந்தப் பாதையில் போக வேண்டும் என்று முடிவு செய்துள்ளோமோ அந்தப் பாதையில்தான் பயணிக்க வேண்டும், வழி மாறக் கூடாது என்று நான் தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். இந்த இயக்கம் அமைதி வழியில் பயணித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்றார்.