பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் பாகம் 2 படம் தயாராகி வருகின்றது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கரோனா வைரஸ் பரவலினால் நிறுத்தி வைக்கப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால் இடையில் இந்தப் படம் டிராப் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது டிராப் ஆவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு பிரமாண்ட படத்தை இயக்க உள்ளாராம். 2022ஆம் ஆண்டில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய உள்ளனராம். இப்போதைக்கு கன்னட நடிகர் இந்த படத்தில் நடிப்பதற்காக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.