கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் முருகேசன் மகன் செந்தில்குமார் இவருடைய வயது 48. விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் லேப் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் தன் குடும்பத்தினருடன் விழுப்புரம் மஹராஜபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் வாழ்ந்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து செங்கல்பட்டில் உள்ள அவருடைய நண்பரின் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்துள்ளது அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செந்தில்குமாருக்கு லட்சுமி என்கிற மனைவியும் கோகுலகிருஷ்ணன் தமிழ்ச்செல்வன் என்ற இரண்டு மகளும் இருக்கின்றனர் தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.