அமெரிக்காவின் 46-வது அதிபரை பதவியேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 306 இடங்களில் வெற்றிபெற்றதுடன், கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளையும் ஜோ பைடன் பெற்றார். ஆனால் இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 232 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றார். இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பார்லிமெண்ட் கட்டிடத்தை நோக்கிச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் பலியானார். நெரிசலில் சிக்கி உடல் நலம் இல்லாத மூவர் உள்பட மொத்தம் நான்குபேர் மரணமடைந்தனர்.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுடம் கூறுகையில், “இந்த வன்முறையை நான் கண்டிக்கிறேன். வன்முறையை தடுத்து பார்லிமெண்ட் அமைந்துள்ள கட்டிடத்தை காப்பாற்ற போலீஸாருக்கு நான் உத்தரவிட்டேன். வரும் 20-ம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவில் நான் கலந்துகொள்ளமாட்டேன்” என்றார்.